2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஒஸ்மானியக் கல்லூரிக்கு ஆளுநர் விஜயம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எல்.லாபீர்


யாழ்.ஒஸ்மானியக் கல்லூரிக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி புதன்கிழமை (20) விஜயம் செய்து, கல்லூரியின் அபிவிருத்தி, மாணவர்களின் வரவு நிலைமை, கல்வி அபிவிருத்தியில் மாணவர்களின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து, அதிபர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர், உபஅதிபர் தலைமையில் 4 பேர் கொண்ட அபிவிருத்திக் குழுவொன்றை இதன்போது அமைத்தார்.

அந்தக் குழு இனிவருங்காலங்களில் பாடசாலை தொடர்பான அனைத்து வேலைத் திட்டங்களையும் கவனிக்கும் என்றும், அதற்கான உதவிகளை ஆளுநர் செயலகத்தின் ஊடகச் செய்வதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X