2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முதிரை மரத் தீராந்திகள் கடத்தியவருக்கு தண்டம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சிப் பகுதியில் இருந்து அனுமதியின்றி கன்டர் வாகனத்தில் முதிரைமரத் தீராந்திகளைக் கடந்த மாதம் கடத்திச் சென்ற நபருக்கும் 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வியாழக்கிழமை (21) உத்தரவிட்டார்.

மேற்படி தண்டப் பணம் கட்டத்தவறினால் 2 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதவான் கூறினார்.

மேற்படி நபர், கிளிநொச்சிப் பொலிஸாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

இந்நிலையில், மேற்படி வழக்கு வியாழக்கிழமை (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் தண்டம் விதித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X