2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கடமைக்கு சென்றவர் சடலமாக மீட்பு

George   / 2014 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் எழுத்தூர் செல்வநகர் கிராமத்தில் பின் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து சடலமொன்று இன்று திங்கட்கிழமை (25) காலை மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எழுத்தூர் செல்வநகர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தர்மசீலன் கரிகரன் (வயது-33) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின்  மன்னார் சாலையில் பேரூந்து சாரதியாக கடமையாற்றி வருகின்றார்.
இன்றைய (25) தினம் காலை வழமை போல் கடமைக்குச் சென்ற நிலையிலே குறித்த குடும்பஸ்தர்; சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று (25) மதியம் 12.45 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பதில் நீதவான் எம்.சதக்கத்துள்ளா சடலத்தை பார்வையிட்டதோடு சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதே வேளை குறித்த குடும்பஸ்தர் அணிந்திருந்த காட்சட்டை பையினுள் காணப்பட்ட இரண்டு அலைபேசிகளையும் மன்னார் பொலிஸார் மீட்டுள்ள நிலையில் குறித்த இரண்டு அலைபேசிகளிகளிலிருந்து இறுதியாக ஏற்படுத்தப்பட்ட அழைப்புக்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறு பதில் நீதவான் எம்.சதக்கத்துள்ளா பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சடலம் தற்போது மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X