2025 ஜூலை 16, புதன்கிழமை

முன்னாள் போராளி, ரி.ஐ.டி யிடம் ஒப்படைப்பு

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற குற்ற செயல்களுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர், பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் வியாழக்கிழமை (11) தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை (08) கைது செய்யப்பட்ட கிளிநொச்சி விநாயகர்புரத்தை சேர்ந்த பீற்றர் விக்கினேஸ்வரன் (வயது 34) என்பவரே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவரை ரி.ஐ.டி யினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X