2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தொலைபேசி திருத்தும் பயிற்சி நெறி

Kogilavani   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தொலைபேசி திருத்தும் பயிற்சி நெறியொன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் முல்லைத்தீவு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.ரஜனிகாந்த் செவ்வாய்க்கிழமை(28) தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

'புதுக்குடியிருப்பு ஆதிபராசக்தி மண்டபத்தில் திங்கட்கிழமை(27) ஆரம்பமான குறித்த பயிற்சியானது தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வியாழக்கிழமை(30) வரை நடத்தப்படவுள்ளது.

திறமையான வளவாளர்களைக் கொண்டு இந்த பயிற்சி நெறியானது நடத்தப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் இளைஞர்கள் சுயமாக தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இதுபோன்ற பல தொழில் பயிற்சி நெறிகளை இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் முன்னெடுத்து வருவதாகவும் உதவி ஆணையாளர் எஸ்.ரஜனிகாந்த் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .