2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

'எங்கள் கிராம உழவர் சந்தை' திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, ஓமந்தையிலுள்ள  பொதுச்சந்தையில் 'எங்கள் கிராமம் உழவர் சந்தை'  இன்று வெள்ளிக்கிழமை  திறந்துவைக்கப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குரிய இச்சந்தைத்தொகுதி நீண்டகாலமாக இயங்காதிருந்தது. இந்நிலையில், இச்சந்தை வவுனியா மாவட்ட கமக்காரர் அமைப்பால் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. இச்சந்தையில் விவசாயிகள்  உற்பத்திகளை  நேரடியாக விற்பனை செய்ய முடியுமென்பதுடன், மரக்கறிகளை வெளியூர்களுக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் வன்னி அபிவிருத்திக்குழு தலைவருமான ரிசாட் பதியுதீன், வவுனியா மாவட்ட மாகாண விவசாய பிரதிப்பணிப்பாளர்  அ.சகிலாபானு, திவிநெகும திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி அனுர, வடமாகாணசபை உறுப்பினர் எம்.ஜயதிலக, வர்த்தக கைத்தொழில் அமைச்சின் இணைப்பாளர்களான அப்துல்பாரி, முத்து முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .