2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கடல்நீரினால் தர்கா நகர் மக்கள் விசனம்

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள எருக்கலம் பிட்டி 'தர்கா நகர்' கிராமத்துக்குள் கடல் நீர் உட்செல்வதினால் அக்கிராம மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக, எருக்கலம்பிட்டி தர்கா நகர் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் முஹமட் சுகைப் தெரிவித்தார்.

எருக்கலம் பிட்டி தர்கா நகர் கிராமத்தில் 2002ஆம் ஆண்டு முதல் 65 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் 15 குடும்பங்கள் கடற்கரை ஓரத்தில், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரச காணியில் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த 15 வீடுகளுக்கும் பின்புறமாக சுமார் 200 மீற்றர் தூரம் கொண்ட தடுப்புச் சுவரை அமைக்க அரச அதிகாரிகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்புச் சுவர் அமைக்கும் பணியும் ஆரம்பமானது.

ஆனால், 200 மீற்றர் நீளம் கொண்ட தடுப்புச்சுவர் அமைப்பதற்கு பதிலாக, சுமார் 20 மீற்றர் தடுப்புச் சுவர் மாத்திரம் அமைக்கப்பட்டதன் பின்னர் சுவர் அமைக்கும் பணி கை விடப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக அக்கிராம மக்கள், மன்னார் பிரதேச சபை, மன்னார் மாவட்டச் செயலகம், மன்னார் பிரதேச செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றுக்கு பல  தடவை எழுத்து மூலம் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை.

இதற்குரிய உரிய அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் நடந்து கொள்ளுவதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த வீடுகள் தற்போது கடல் நீரில் மிதக்கும் வகையில் காணப்படுகின்றது.
இக்கிராமத்துக்கு இந்திய வீட்டுத்திட்டம் கிடைத்துள்ள போதும் 4 வீடுகள் அமைக்க மாத்திரமே நிதி வழங்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய 35 குடும்பங்களுக்கும் இது வரை வீடு அமைப்பதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை.
கடற்கரையோரமாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணியில் மின்சார சபையின் தெரு மின் கம்பங்கள் மக்களின் வீட்டு வளவினுல் காணப்படுகின்றது.
இதனால் இக்கிராம மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அரசியல் வாதிகளும் அரச திணைக்கள அதிகாரிகளும் அசமந்த போக்குடனும் சுயநலத்துடனும் செயற்பட்டு  வருவதாக அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே, உரிய அதிகாரிகள் எருக்கலம்பிட்டி தர்கா நகர் கிராம மக்களின் நலனில் கவனம் செலுத்தி, இடை நடுவே கைவிடப்பட்ட கடல் நீர் கிராமத்தினுள் உட்செல்லாத வகையில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரை முழுமையாக அமைத்து, இக்கிராம மக்களை இயற்கை அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அக்கிராம மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில், மன்னார் மாவட்ட திடீர் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த தடுப்புச் சுவர் அமைப்பதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .