2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மானிய முறையில் மோட்டார் சைக்கிள்கள்

Sudharshini   / 2014 நவம்பர் 11 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பணிபுரியும் வெளிக்கள அரச உத்தியோகஸ்தர்களுக்கு மானிய விலையில் மோட்டர் சைக்கிள் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் செவ்வாய்கிழமை (11) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கில்களை வழங்கி வைத்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, துணுக்காய், வெலிஓயா, மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலகங்களின் கீழ், கடமையாற்றும் வெளிக்கள அரச உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .