2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

'சட்டவிரோத மதுபானம் அற்ற கிராமத்தை உருவாக்குவோம்'

Thipaan   / 2014 நவம்பர் 22 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


'சட்டவிரோதமான மதுபானம் அற்ற கிராமத்தை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளிலான கிராம மட்ட விழிப்புணர்வுச் செயற்பாடுகள், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் ஏற்பாட்டில் கிளிநொச்சி உதயநகர் கிழக்கு மற்றும் கிருஸ்ணபுரம் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மதுவரித்திணைக்கள மதுவரி அத்தியட்சகர் எஸ்.மதன்மோகன்  மற்றும் நிலையப்பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ராயு ஆகியோரின் ஏற்பாட்டில், இவ்விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை (21) உதயநகர் கிழக்கு கிராம அலுவலர் தலைமையில் உதயநகர் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தருங்கு நடைபெற்றது.

இதில், சட்டவிரோத மதுபானத்தை அருந்துவதனால் இருதய நோய்கள் ஏற்படுதல், குடும்பப் பொருளாதாரம் பாதிக்கப்படுதல், சிறுவர்களின் கல்வி போஷாக்கு என்பன பாதிக்கப்படுதல், தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .