2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் கடலில் மூழ்கி மரணம்

Sudharshini   / 2015 ஜனவரி 13 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், சௌத்பார் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை கடற்தொழிலுக்குச் சென்ற நிலையில் திங்கட்கிழமை (12) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யோகராசா கிஸாந்தன் (வயது 17) என்ற சிறுவனே தனது வீட்டிலிருந்து சௌத்பார் கடற்பரப்பில் சிறிய ரக படகு ஒன்றில் தனியாக மீன் பிடிக்கச் சென்றுள்ள நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவன் மாலை 5.30 மணியாகியும் வீடு திரும்பாத நிலையில் குறித்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடற்கரை பகுதிக்குச் சென்று தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். எனினும் குறித்த சிறுவன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை காலை முதல் அப்பகுதி மீனவர்கள் கடலில் கடுமையான தேடுதல்களை மேற்கொண்ட நிலையில் கடற்கரையில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் குறித்த சிறுவன் தொழிலுக்குச் சென்ற சிறிய ரக படகு மற்றும் வலைகள் என்பன கடலிலிருந்து மீட்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கடற்படையினரின் உதவியுடன் தொடர்ந்தும்  மீனவர்கள் கடலில் தேடுதல்களை மேற்கொண்ட போது மாலை 3 மணியளவில் குறித்த சிறுவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .