2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கால்நடைகளை செயற்கை முறையில் சினைப்படுத்த நடவடிக்கை

Menaka Mookandi   / 2015 ஜனவரி 13 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 1472 மாடுகளும், 216 ஆடுகளும் செயற்கை முறையில் சினைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் என்.கௌரிதிலகன் செவ்வாய்க்கிழமை (13) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடை உற்பத்தி வளத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நல்லின ஆடு, மாடுகளை இனப்பெருக்கம் செய்யும் வகையில் செயற்கைமுறை சினைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 918 மாடுகளுக்கும் 187 ஆடுகளுக்கும், கண்டாவளைப் பிரதேச செயலக பிரிவில் 333 மாடுகளுக்கும் 19 ஆடுகளுக்கும், பூநகரி பிரதேச செயலக பிரிவில் 154 மாடுகளுக்கும் 8 ஆடுகளுக்கும், பளைப் பிரதேச செயலக பிரிவில் 67 மாடுகளுக்கும் 02 ஆடுகளுக்கும் இவ்வாறு சினைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .