2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முல்லைத்தீவு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

George   / 2015 ஜனவரி 14 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நடராசா கிருஸ்ணகுமார்


முல்லைத்தீவு கடலில் நிலவும் கடும் கடற்கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் எவரும் கடந்த இரண்டு நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லையென முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, புதன்கிழமை (14) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 26 கடற்றொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

முல்லைத்தீவு கரையை சார்ந்த கடல்pல் இந்த வருடத் தொடக்கத்திலிருந்து இறால் படுகை அதிகரித்துள்ளது. இருந்தும், வட்டுவாகலில் இறால் மீன்பிடி நடவடிக்கைகள் இன்னமும் தொடங்கவில்லை.

வட்டுவாகல் அணைக்கட்டு வெட்டப்பட்டு கடலுக்கு நீர் சென்று கொண்டிருப்பதன் காரணமாக அணை மூடப்பட்டதன் பின்னரே இறால் பிடி இடம்பெறும்.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி முல்லைத்தீவில் நடைபெற்ற இந்திய றோலர்களின் அத்துமீறல்களுக்கு எதிரான அமைதிப் பேரணிக்கு பின்னர் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி முற்றாக இடம்பெறவில்லை என அவர் ஆமலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .