2025 ஜூலை 07, திங்கட்கிழமை

திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 மே 16 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மன்னார் பாப்பாமோட்டை பகுதியில் அமைக்கப்பட்டு வந்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் வெள்ளிக்கிழமை (15) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டது.

உலக வங்கி ஒதுக்கீடு செய்த 47 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பாப்பாமோட்டை பகுதியில் 4 ஏக்கர்; கொண்ட காணியில் பசளை தயாரிப்பதற்கான திண்;மக்கழிவு முகாமைத்துவ நிலையம் அமைக்கப்பட்டு வந்தது.

மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், நகர சபை உறுப்பினர்கள், மன்னார் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.துரம், மன்னார் நகர சபையின் செயலாளர் லெனாட் பிரிட்டோ, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மன்னார்-வவுனியா மாவட்டங்களுக்கான பொறியியலாளர் உதயசீலன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .