2025 ஜூலை 07, திங்கட்கிழமை

புங்குடுதீவு மாணவியின் கொலை கண்டிக்கத்தக்கது: குணசீலன்

Gavitha   / 2015 மே 21 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை உயர்தர மாணவியான சிவலோகநாதன் வித்தியா மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிருகத்தனத்துக்கும் மேலான இச்செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்களின் கலாச்சாரமும் பண்பாட்டையும் பேணிப்பாதுகாப்பதற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கும் எமது தமிழ்ப்பிரதேசத்தில்  அரங்கேரியிக்கும் இந்த சம்பவம் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயல் தொடர்பாக வழமை போல் பொலிஸ் விசாரணை, நீதிமன்ற விசாரணை என கடந்த காலங்களில் நடைபெற்ற மிக கொடூர செயல்கள் மூடி மறைக்கப்பட்டது போன்று, வித்தியாவின் கொலை தொடர்பான இந்த கொடூரச் செயல் மறைக்கப்படாது, பொலிஸ் விசாரணை, நீதிமன்ற விசாரணைகள் நீதியான முறையில் இடம்பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவர்களுக்கான தண்டனைகள் உடனடியாக வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் பாதுகாக்கமுடியும். இலங்கை சட்டத்தில் இன்னும் மரண தண்டனை அகற்றப்படாது உள்ளது என்று தெரிவித்த அவர், இலங்கையில் அத்தண்டனை வழங்கப்படுவதில்லை என்றும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் போது,  அவ்வாறான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற மனநிலை தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட நீதித்துறை சரியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாழிகளுக்கு ஆகக்கூடிய  தண்டனைகளை வழங்குவதன் மூலம் வித்தியாவுக்கு நடந்த கொடுமை எதிர்காலத்தில் எமது பெண் சமூகத்துக்கும் இடம் பெறாத வகையில் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .