2025 ஜூலை 05, சனிக்கிழமை

நீரில் மூழ்கி சிறுவன் பலி

Thipaan   / 2015 மே 26 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு சிலாவத்தையில் திங்கட்கிழமை (25) கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு உன்னாப்புலவு என்னும் இடத்தைச் சேர்ந்த தமிழழகன் தர்சிகன் (வயது 14) என்ற சிறுவனே உயிரிழந்தார்.

வற்றாப்பளை கண்ணகையம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் திருவிழாவுக்கு விளக்கேற்றுவதற்காக, கடல் தீர்த்தம் எடுக்க ஆலயத்திலிருந்து சென்றவர்களுடன் சிறுவர்கள் சிலரும் சேர்ந்து சென்றுள்ளனர்.

சிறுவர்கள் கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது, சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி அவதிப்பட்டுள்ளான். இதனை அவதானித்த இளைஞர்கள் சிறுவனை மீட்டுள்ளனர்.

பொலிஸாரின் வாகனத்தில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (25) இரவு சிறுவன் உயிரிழந்துள்ளான். சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .