2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதுமுறிப்புக் புனரமைப்பால் 385 விவசாயக் குடும்பங்கள் பயனடைகின்றன

Thipaan   / 2015 மே 26 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, புதுமுறிப்புக்குளம் புனரமைப்புச் செய்யப்பட்டமையால் அதன் கீழ் பயிர் செய்யும் 385 விவசாயக் குடும்பங்கள் நன்மையடைந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றாக காணப்படும் புதுமுறிப்புக்குளம்; மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்டதனால்; இதன் கீழுள்ள விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தனர்.

இந்நிலையில் வடமாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி 5.84 மில்லியன் ரூபாய் செலவில் குளம் புனரமைக்கப்பட்டது.

தற்போது குளத்தின் புனரமைப்புப் பணிகள் முடிவடைந்தமையால் குளத்தின் கீழ் 850 ஏக்கரில் விவசாயச் செய்கை மேற்கொள்ளக்கூடியதாகவுள்ளது என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .