2025 ஜூலை 05, சனிக்கிழமை

கசிப்பு உற்பத்தி செய்தவருக்கு சிறைத்தண்டனை

Kogilavani   / 2015 மே 26 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

சுழிபுரம் குடாக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவருக்கு 4 மாதச் சிறைத்தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி திங்கட்கிழமை (25) தீர்ப்பளித்தார்.

வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்காக பிரதேச செயலாளர் அ.சோதிநாதன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

சிவில் பாதுகாப்புக்குழுக்களை அமைத்து கசிப்பு உற்பத்தி செய்பவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பிரதேச செயலாளர் பணித்திருந்தார். இதற்கமைவாக மேற்படி பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக கிடைக்கபெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து திங்கட்கிழமை (25) அங்கு சென்ற குழுவினர், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவரை கைதுசெய்தனர். இவரிடமிருந்து, 26 லீற்றர் கசிப்பு, 50 லீற்றர் கோடா என்பனவும் கைப்பற்றப்பட்டன.

கைதானவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .