Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 மே 27 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா தெற்கு வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவரால் அப்பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று வவுனியா பிரதேச செயலாளரினால், பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்க சேஷ்டைகள் விடுதல், தகாத வார்த்தைகளைப் பிரயோகித்தல் என, மேற்படி ஆசிரியருக்கு எதிராக பிரதேச செயலக சிறுவர், பெண்கள் அலகுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என பிரதேச செயலாளர், பொலிஸாருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், பொலிஸாரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025