Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 30 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
வவுனியா டொவொஸ்கோ இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது.
யுத்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பராமரிப்பில் பெற்றோரின் ஆதரவின்றியிருந்த பிள்ளைகளில் 77 பேர், தற்போது வவுனியா டொவொஸ்கோ இல்லத்தில் அருட்சகோதரிகளின் பராமரிப்பின் கீழ் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.
அங்கு வசிக்கும் பிள்ளைகளுக்கு அத்தியவசியமாக தேவைப்படும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கு போதுமான நிதி இன்மையால் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இல்லத்துக்கு பொறுப்பான அருட்சகோதரி, நம்பிக்கை ஒளி நிறுவனத்துக்கு கடிதம் மூலம் உதவிகோரியிருந்தார்.
இதற்கமைவாக, இன்று 29.05.2015 லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் நம்பிக்கை ஒளி தன்னார்வ நிறுவனத்தின் இணை நிறுவனமாக, தாயகத்தில் இயங்கும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் ஊடாக குறித்த பிள்ளைகளின் நிலை அறிந்து அவர்களுக்கு தற்போது அத்தியவசியமாக தேவைப்படும் பொருட்களான பாதணிகள், தேவையான ஆடைகள், படுக்கை விரிப்புக்கள், தலையணைகள், குடைகள், தேநீர்கோப்பைகள் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான கணிகளும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் தலைவர் கே.சிவகாந்தன் மற்றும் நம்பிக்கை ஒளி நிறுவனம் சார்பாக பஞ்சலிங்கம் சுபாஸ்கரன் உட்பட இந்நிறுவனத்தின் ஊழியர்களும் கலந்து கொண்டு, ஆதரவின்றி இருக்கும் 77 பிள்ளைகளுக்கு அத்தியவசியமாக தேவைப்படும் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Jul 2025