2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வித்தியாவை கொலை செய்தவர்களுக்கு அதியுயர் தண்டனை வழங்குமாறு அமைதி ஊர்வலம்

Princiya Dixci   / 2015 ஜூன் 01 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரியும் குறிப்பாக புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்தும் கைதுசெய்யப்பட்ட 09 குற்றவாளிகளுக்கும் அதியுயர் தண்டனை வழங்கக்கோரியும் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த அமைதி ஊர்வலம், திங்கட்கிழமை (01) இடம்பெற்றது.

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் மன்னார் பொது நூலகத்துக்கு முன்பாக குறித்த அமைதி ஊர்வலம் ஆரம்பமானது.

நூற்றுக்கணக்கான பெண்கள் தமது வாயை கறுப்புத் துணியினால் கட்டி, சுலோகங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று மன்னார் பஸார் பகுதியில் ஒன்று கூடினர்.

அங்கு சுமார் 30 நிமிடங்கள் அமைதியான முறையில் சுலோகங்களை ஏந்தியவாறு நின்றனர். பின்னர் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கையெழுத்துக்கள் இடப்பட்டு, பிரதான வீதியூடாக சென்று மீண்டும் மன்னார் பொது நூலக நுழைவாயிலை சென்றடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .