2025 ஜூலை 16, புதன்கிழமை

22 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் விடத்தல் தீவு பொலிஸ் பிரிவில் உள்ள மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாப்பாமோட்டை பகுதியில் 22 கிலோ 500 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சா வெள்ளக்கிழமை (12) இரவு மீட்கப்பட்டுள்ளதாக விடத்தல் தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீ.ஜே.குணதிலக்க தெரிவித்தார்.

விடத்தல் தீவு பொலிஸாருக்கு வெள்ளிக்கிழமை (12) இரவு கிடைக்கப் பெற்ற இரகசியத்தகவலை அடுத்து, பாப்பாமோட்டை பகுதிக்கு சென்ற விடத்தல் தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீ.ஜே.குணதிலக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இரவு 9.30 மணியளவில் குறித்த கஞ்சாப்பொதியினை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா பொதி 22 கிலோ 500 கிராம் நிறை கொண்டது எனவும் அது  கேரளா கஞ்சா எனவும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் வவுனியா ஆத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட கஞ்சா 45 இலட்சம் ரூபாய் பெறுமதியானது எனவும் விடத்தல் தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீ.ஜே.குணதிலக்க தெரிவித்தார்.

சந்தேக நபர் விடத்தல் தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரனைணகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X