2025 மே 21, புதன்கிழமை

28,000 லீற்றர் குடிநீர் விநியோகம்

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயன் வட்டாரத்தில், நாள்தோறும் 28,000 லீற்றர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி தயாபரன் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில், குடிநீர் நெருக்கடி மிகுந்த பகுதிகளாக அக்கராயன், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் இடங்கள் காணப்படுவதாகவும் இதில் அக்கராயன் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கெங்காதரன் குடியிருப்பு, அக்கராயன் கிழக்கு, மேற்கு, மத்தி ஆகிய பகுதிகள், குடிநீர் நெருக்கடி மிகுந்த பகுதிகளாகுமெனவும் தெரிவித்தார்.

குடிநீர் நெருக்கடி நாள்தோறும் அதிகரித்து வருவதன் காரணமாக, கரைச்சி பிரதேச சபை ஊடாக இயன்றளவு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் அக்கராயன் வட்டாரத்தில், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் கூறினார்.

அத்துடன், அக்கராயன் வட்டாரத்தில், வரட்சி காலத்தில், நீர் மூலகங்கள் வற்றி விடுவதன் காரணமாக, குடிநீரை விநியோகிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனால், கிளிநொச்சி நகரில் இருந்து அக்கராயனுக்கு குடிநீரை எடுத்து வருகின்ற நிலைமை தற்போது காணப்படுவதாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X