சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 நவம்பர் 13 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு முத்தையன் கட்டு நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கீழுள்ள உடையார் கட்டு மற்றும் விசுவமடுக்குளம் உள்ளிட்ட 4 குளங்கள் முழுமையான நீர் தேங்கி வான் பாய்கின்றன என முத்தையன் கட்டு நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உடையார்கட்டு குளத்தின் நீர் மட்டம் 23 அடி 5 அங்குலமாகவும் மருதமடுக்குளத்தின் நீர் மட்டம் 14 அடி 3 அங்குலமாகவும் விசுவமடுக்குளத்தின் நீர் மட்டம் 20 அடி 4 அங்குலமாகவும் தட்டையர் மலை குளத்தின் நீர் மட்டம் 13 அடி 9 அங்குலமாகவும் உயர்வடைந்து முழுமையாக நீர் தேங்கி வான் பாய்கின்றன.
இது தவிர ஏனைய குளங்களான முத்துஐயன்கட்டுக்குளத்தின் நீர்மட்டம் 15 அடி 11 அங்குலமாகவும் கணுக்கேணிக்குளத்தினுடைய நீர்மட்டம் 11 அடி 3 அங்குலமாகவும் தண்ணீர் முறிப்புக்குளத்தினுடைய நீர்மட்டம் 17 அடி 4 அங்குலமாகவும் மடவாளசிங்கன்குளத்தின் நீர்மட்டம் 15 அடியாகவும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026