Gavitha / 2021 ஜனவரி 12 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா, தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட 42 நகர கோட்டப் பாடசாலைகளை நாளை (13) மூடுவதற்கு, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டச் செயலகத்தில், இன்று (12) நடைபெற்ற அவசரக் கூட்டத்திலேயே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரைச் சேர்ந்த 2,000 பேரின் பிசிஆர் முடிவுகள் வரும் வரை, வவுனியா நகரை அண்மித்த நெளுக்குளம், தாண்டிக்குளம், பூந்தோட்டம், மூன்றுமுறிப்பு, மடுக்கந்தை ஆகிய பகுதிகளில், சோதனை நிலையங்களை அமைத்து, அதற்குட்பட்ட பகுதிகளுக்குள் முடக்க நிலைமையை ஏற்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையிலேயே, இந்தப் பாடசாலைகளை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது என்றும் செட்டிகுளம் கோட்டம், வவுனியா-வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட இரண்டு கோட்டப் பாடசாலைகளினதும் கல்விச் செயற்பாடுகளை, வருகைதரும் ஆசிரியர்களைக் கொண்டு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முடக்கப்பட்ட பகுதியில் இயங்கும் பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசியரியர்கள், கடமைக்கு செல்ல தேவையில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025