2021 மே 08, சனிக்கிழமை

4.2 மில்லியன் ரூபாவில் பொதுநூலகம் நிர்மாணிப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட வட்டக்கச்சி பொதுநூலகம் 4.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் செவ்வாய்கிழமை (1) தெரிவித்தார்.

2014  ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகளிலிருந்தே பொதுநூலகம் அமைக்கப்படவுள்ளதாகவும், தற்போது பொதுநூலகம் அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட வட்டக்கச்சி பொதுநூலகம், வட்டக்கச்சி பொதுச்சந்தை, ஆயுள்வேத வைத்தியசாலை, கரைச்சி பிரதேச சபையின் உப அலுவலகம் ஆகியன யுத்தத்தினால் சேதமடைந்தன. இவற்றில் பொதுச்சந்தை நெல்சிப் திட்டத்தின் கீழ் 5 மில்லியன் ரூபா செலவில் ஏற்கனவே அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X