2025 ஜூலை 23, புதன்கிழமை

47 பாடசாலைகளில் குடிநீர் நெருக்கடி

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கல்வி வலயத்தில், 47 பாடசாலைகள் குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.ஜோன் குயின்டஸ் தெரிவித்துள்ளார்.

பூநகரி, கண்டாவளைக் கோட்டங்களிலே கூடுதலான பாடசாலைகள் குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாடசாலைகளுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக குடிநீர் வழங்கல் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை இரணைமடுக்குளம் வற்றியதன் காரணமாக கிளிநொச்சி நகரில் உள்ள பாடசாலைகள், திணைக்களங்கள் உட்பட குடிமனைகள் அனைத்திலும் கிணறுகளின் நீர் மட்டம் குறைவடைந்து குடிநீர் நெருக்கடியும் உருவாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் இவ்வாண்டு வரட்சியினால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .