2025 ஜூலை 17, வியாழக்கிழமை

496 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள கையளிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 496 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஆர்;.ரவீந்திரன் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.

கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால், கடந்த காலங்களில் மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட்டு வந்தது. இதில் மாற்றம் கொண்டுவந்த அமைச்சு, தற்போது மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கி வருகின்றது.

ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா 1 இலட்சத்து 12,500 ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 31 மீனவர்களுக்கு கொடுப்பதற்கான உபகரணங்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

மிகுதி மீனவர்களுக்கான உபகரணங்களும் கிடைக்கப்பெற்ற பின்னர், மீனவர்களிடம் உபகரணங்கள் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X