Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
பளை பகுதியில், இன்று (30), நிலத்தில் புதைந்த நிலையில் காணப்பட்ட 55 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன என, பளை பொலிஸார் தெரிவித்தனர்.
பளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார் ஒருவருடைய காணியில் இருந்தே, இந்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
காணி உரிமையாளர் காணியை துப்புரவு செய்த போது, நிலத்தில் புதைந்த நிலையில் வெடிபொடள்கள் இருப்பதை அவதானித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் 11 மோட்டார் செல்களை அடையாளப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்த இடத்தை அகழ்ந்த போது, அங்கிருந்து 55 மோட்டார் செல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றை செயலிழப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என, பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago