2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

60 வருடங்களின் பின் கிடைத்த வெற்றி

Freelancer   / 2022 மார்ச் 15 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிபோஜன்

60 வருடங்களின் பின் கிளிநொச்சி பெரியகுளம்  ஐயனார்  வித்தியாலயத்தில்     புலமைப்பரிசில் பரீட்சையில்  164 புள்ளிகளைப் பெற்று சாந்தீபன் பிரவீன்  என்ற மாணவன் சித்தியடைந்துள்ளார்

1960 ஆம்  ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையில் 2015 ஆம் ஆண்டு 3 மாணவர்களும் 2017 ஆம் ஆண்டு ஒரு மாணவரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றிருந்தாலும் 

60 வருடங்களுக்கு பின்னர் 164 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தமை என்பது இதுவே முதல் தடவையாகும்

இப் பெறுபேற்றை பெற்ற மாணவன் சாந்தீபன் பிரவீனிடம்  வினவிய பொழுது,

 இவ்வாறான  நெருக்கடி வாய்ந்த சூழலில் பிந்தங்கிய கிராமம் என புறம்தள்ளுபவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் எமது பாடசாலை எந்த அடைவுமட்டத்தை பெறவில்லை மற்றும் மாணவர் எண்ணிக்கை குறைவு என காரணம் காட்டி எம் கிராம பாடசாலையை மூடுவதற்கு ஆரம்ப பணிகள் இடம் பெற்றதனை என் பெற்றோர் மூலம் கேள்விப்பட்டு  எனது முயற்சியை கை விடாது தொடர்ந்து படித்தேன்.

எனக்கு ஆர்வம் ஊட்டிய பெற்றோர் மற்றும் வழிகாட்டி  எனக்கு கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கும்  குறிப்பாக சுதர்சன் ஆசிரியர் அவர்களுக்கும்  நன்றிகளை தெரிவிப்பதோடு பிந்தங்கிய கிராமம் என்பதற்கும்   கல்விக்கும் தொடர்பில்லை என் போன்று வளரத் துடிக்கும் சாதிக்க துடிக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள் எமக்கும் கரம் கொடுங்கள் என   கேட்டுக் கொண்டார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .