2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

60 வருடங்கள் பழைமை வாய்ந்த நீர்தாங்கியை அகற்ற நடவடிக்கை

Kogilavani   / 2014 நவம்பர் 06 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள சுமார் 60 வருடங்கள் பழைமை வாய்ந்த   நீர்த்தாங்கியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மன்னார் நகர சபை முன்னெடுத்துள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

குறித்த நீர்த்தாங்கியை அகற்றுவது தொடர்பில் புதன்கிழமை(5) மாலை மன்னார் நகர சபையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

'எதிர்வரும் 11 ஆம் நீர்தாங்கியை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நீர்தாங்கி யுத்த காலத்தில் கடுமையாக சேதமடைந்தது.

மைதானத்தில் விளையாடுகின்ற போது சில விளையாட்டு வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்ட சம்பவங்களும் உள்ளன.

இந்நிலையிலே மக்களின் கோரிக்கைக்கு அமைவாக உடனடியாக இந்த வேளைத்திட்டத்தை மன்னார் நகரசபை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது. இப்பணிக்காக போக்குவரத்து பாதைகளும் மாற்றப்பட்டுள்ளன. அதுதொடர்பில் மன்னார் நகர சபையினால் மக்களுக்கு அறிவிக்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .