2025 மே 10, சனிக்கிழமை

672 கிலோ உலர்ந்த மஞ்சள் மீட்பு

Niroshini   / 2021 ஜூலை 08 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - பெரியகடை கடற்கரை கலப்புப் பகுதியில் வைத்து, இன்று (08) அதிகாலை 2.30 மணியளவில்,  ஒருதொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகளை, இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட இராணுவத்தினர், மன்னார் - பெரியகடை கடற்கரை கலப்புப் பகுதியில் வைத்து, சட்ட விரோதமாக நாட்டக்குள் கொண்டு வரப்பட்ட 18 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 672 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகளையும் மீட்டனர்.

அத்துடன், வள்ளங்கள் - 3 மற்றும் பட்டா ரக வாகனம் - 1 என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து,  சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

மீட்கப்பட்ட மஞ்சள் மூடைகள் உள்ளிட்ட பொருள்கள், மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X