2025 ஜூலை 17, வியாழக்கிழமை

7 ஆயிரம் பேருக்கு மாதாந்த உதவித் தொகை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், வி.தபேந்திரன்

சமூக சேவைகள் திணைக்களத்தால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 7 ஆயிரத்து 786பேருக்கு மாதாந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்டப் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 250 ரூபா முதல் 500 ரூபாய் வரையில் மாதாந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 3426 பேருக்கும், பச்;சிலைப்பள்ளியில் பிரதேச செயலக பிரிவில் 765 பேருக்கும், பூநகரிப் பிரதேச செயலக பிரிவில் 1612 பேருக்கும் கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 1983 பேருக்கும் என உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், புற்றுநோய்க் கொடுப்பனவான 500 தொடக்கம் 750 வரையிலான தொகையினை கிளிநொச்சி மாவட்டத்தில் 157 பேர் பெற்று வருகின்றனர்.

அத்துடன், 250 ரூபா தொடக்கம் 500 ரூபாய் வரையான தொகை கொண்ட காசநோய்க் கொடுப்பனவை 17 பேரும், 500 ரூபாய் தொகையான சிறுநீரக நோய்க் கொடுப்பனவை 9 பேரும் பெற்று வருவதாக அந்தப் புள்ளி விபரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X