2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் 73 பேருக்கு டெங்கு நோய்

Kogilavani   / 2015 ஜனவரி 13 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு 73 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாணத்திலுள்ள ஏனைய மாவட்டங்களில் காணப்பட்ட டெங்கு நோய்த்தாக்கத்தை விட குறைவானளவு டெங்கு நோய்த்தாக்கம் தாக்கமே கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2013 ஆம் ஆண்டு 72 பேருக்கும் 2011 ஆம் ஆண்டு 84 பேருக்கும், 2011 ஆம் ஆண்டு 56 பேருக்கும் டெங்கு நோய்த்தாக்கம் இருந்தமை அறியப்பட்டது.

நோய்த்தாக்கத்துக்குள்ளானவர்கள் அனைவருக்கும் தகுந்த முறையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் இதுவரையில் 3 பேர் டெங்கு நோய்த்தாக்கத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய்த்தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார வைத்தியதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .