2021 ஜூன் 14, திங்கட்கிழமை

‘சத்து இல்லாத பரம்பரையே உருவாகும்’

Editorial   / 2017 மே 25 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னஞ்சிறிய நாடுகள் கூட, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் பலவற்றைச் செய்து வருகின்றன.  

ஆனால், மிகப் பெரிய நாடு; மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நாடு எனச் சொல்லப்படும் இந்தியாவினால் ஏன் விளையாட்டுத்துறையில், உலக அளவில், வீர புருசர்களை உருவாக்க முடியவில்லை? 

இந்தியா திரைப்படங்களில்கூட உலக சாதனைகளை, அதிஉயர் விருதுகளைப் பெற்றுக் குவிக்கின்றது எனச் சொல்ல முடியுமா? சதா ஒரே மாதிரியான பொழுதுபோக்குக்கான திரைப்படங்களையே, அதாவது, அரைத்தமாவையே அரைப்பதுபோல திரைப்படங்களையே வெளியிடுகின்றனர்.  

எனது நாடு துடுப்பாட்டத்துறை தவிர விளையாட்டுத்துறையில் உலகஅளவில் பேசப்படுவதில்லை. சின்ன வயதிலேயே விளையாட்டு, கலைத்துறையில் நாம் பயிற்சி வழங்க வேண்டும். அல்லாவிடின் சத்து இல்லாத பரம்பரையே உருவாகும் சாத்தியமுண்டு.  

   வாழ்வியல் தரிசனம் 25/05/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .