2021 ஜூன் 16, புதன்கிழமை

வருடாந்த அலங்கார உற்சவம்

Kogilavani   / 2016 ஜூலை 29 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா             

பதுளை அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த அலங்கார உற்சவம், எதிர்வரும் 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இவ் அலங்கார உற்சவத்தில் 16ஆந் திகதி  பாற்குட பவனியும், 1008 சகஸ்ர சங்காபிஷேகமும் இடம்பெறவுள்ளது.

17 ஆம் திகதி இரவு இரதோற்சவமும்  18ஆம் திகதி தீர்த்தோற்சவமும், கொடியிறக்கமும், மாலை மாவிளக்குப் பூஜையும் இடம்பெறும்.

19ஆம் திகதி பிராயச்சித்த அபிஷேகமும், பூங்காவனமும் இடம்பெற்று, 20ந் திகதி நடைபெறும் வைரவர் மடையுடன், அலங்கார உற்சவம் நிறைவுபெறும்.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பால லெட்சுமண குருக்கள் தலைமையில் சிவஸ்ரீ ஆறுமுக ரமேஸ்வரக் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியர்கள் உற்சவ பூஜைகளை நடத்தவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .