2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

உண்ணும் போது அழகும் நாகரிகமும் இருக்கவேண்டும்

Princiya Dixci   / 2016 ஜூன் 20 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாம் உணவு உண்ணும் போது அதில் அழகும் நாகரிகமும் இருக்கவேண்டும். பார்ப்பவர்கள் அருவருத்து முகம் சுழிக்குமாற்போல, பொது இடங்களில் உணவு உண்பது சாப்பிடுபவர்களின் மீதான மதிப்பும் தாழ்ந்து போகிறது.

சாப்பிடும் போது போதிய நேரம் எடுத்துச் சுவைக்கும் போதுதான் எமக்குச் சமிபாடு ஒழுங்காக நடைபெறுகின்றது. அவசரம், அவசரமாக வாயில் திணிப்பதால் உணவின் சுவை இரசிக்க முடியுமா?

மேலும், உணவைச் சிந்தாமல் உண்பதும் கண்டபடி அதனைக் கிளறாமலும் மிகப் பெரும் சத்தமுடன், உறிஞ்சி அருந்துவதுடன், கைவிரல்களையும் சுவைப்பதைத் தவிர்த்தலே அழகு.

எமது ஒவ்வொரு செயலிலும் நளினம் துலங்க வேண்டும். எமது செயல்களைப் பிறர் நோக்குகிறார்கள் என்பதை உணருங்கள்.

வாழ்வியல் தரிசனம் 20/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X