Editorial / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எந்த நேரமும் உணவைப் பற்றிய சிந்தனையுடன் வாழ்பவர்கள், காலை உணவை முடிப்பதற்கு முன்னர், அடுத்துவரும் பல காலை உணவுகளைப் பற்றியே பேசிக் கொள்வார்கள். மேலும், அந்த வாரத்துக்குரிய மூன்று வேளை உணவு வகைகளைப் பற்றியும் திட்டமிட்டுப் பேசிக் கொள்வார்கள். வாழ்க்கை என்பது, வெறும் சாப்பாடு மட்டும் தானா எனச் சிந்திப்பதில்லை.
என்னதான் சொன்னாலும், வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட அளவுதான். நிகழ்காலத்தை நல்ல சிந்தனைகளுடன், ஆரோக்கியமாக வாழ்ந்தால் என்றும் இன்பம் தான்.
தேகத்துக்கு ஏற்ப, சத்தானதும் சுவையானதுமான உணவு, நல்ல தண்ணீர் என்பவற்றை, எங்கள் உடலுக்குத் தேவையான கலோரிகளைப் பேணும் அளவுக்கு உள்ளெடுத்தால் போதுமானது. எந்த அமிர்தத்தையும் ஆசையுடன் மிகையாக உண்ணுதல் ஆயுளுக்கு உதவாது.
மனம் வழி கட்டு மீறுதல் ஆகாது. இதனால் சரீரத்தில் ரோகம் ஏற்படலாம்; நிம்மதி கெட்டுவிடும். காற்றுப் போல் இலேசான மேனியை வைத்திருந்தால், அது மினுமினுக்கும். செய் கருமங்களை வேகமாகச் செய்து முடிக்கத் தூண்டும். எடை குறையத் திடம் கூடும்.
வாழ்வியல் தரிசனம் 25/10/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago