2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

எந்தச் செல்வத்தினாலும் நிம்ம​தியைப் பெற முடியாது

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னிடம் உள்ள செல்வங்களால்கூட ஒன்றுமே செய்யமுடியாத நிலையில்தான், செல்வந்தர்களில் பலர் தங்களது இயலாமையினைப் புரிந்துகொள்கின்றார்கள்.

காலமாற்றங்கள் பின்விளைவைத் தரும்.  பணத்தினால் எதனையும் சாதித்துவிடலாம் என எண்ணி உறவுகளை வெறுத்து ஒதுக்கியவர்ககள், இறுதியில் மன இறுக்கத்துடன் தனித்து ஒதுங்கும்போதுதான், எந்தச் செல்வத்தினாலும் நிம்ம​தியைப் பெற முடியாது என உணருகின்றார்கள்.

வெறும் நடிப்புக்காகப் படுக்கை அருகே கூடும் அன்பில்லாத கூட்டம், பெருகி நின்றாலும் இத்தகையவர்கள் தனிமைப்பட்டவர்களேயாவர். 

அன்புடன் ஆதரிக்கும் ஒரு ஜீவன் மட்டும் அருகே இருக்கும்போது, ஆத்மா அமைதியுடன் ஆறுதலைப் பெற முடியும். ஆணவச் செருக்கு உடையவர்களுக்குப் பக்கத்தில் எவர் வருவர்?

இது தனவந்தர்களுக்கு மட்டுமல்ல; சிந்தனைத் திரிவுபட்ட அரசியல் தலைவர்களுக்கும் ஏற்புடைய உண்மை நிலைதான்.

வாழ்வியல் தரிசனம் 05/05/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X