Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூலை 20 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீணான பழிச் சொல்லையும் தண்டனைகளையும் ஏற்பது போல மனச் சுமைகள் வேறில்லை. ஏதுமறியாதவர்கள் மீதும் வலிந்து பிரச்சினைகள் புகுத்தப்படுவதுமுண்டு.
எச்சரிக்கை உணர்வுடன் இருந்தாலும் ஏதோ ஒரு விதமாக துன்பங்கள் சிலரைத் துவைத்தெடுத்து விடுகின்றன.
உண்மையாக வாழ்ந்தாலும் வருகின்ற வேதனைகளை அழிப்பது எப்படி? சமூகம் சில சமயங்களில் தெளிவில்லாத பயணத்தையே நாடுகின்றது. சரி, பிழை பற்றித் திரும்பிப் பார்ப்பதில்லை. சாட்சியங்களும் சூழ்ச்சி செய்து விடுவதுண்டு. நீதியின் பார்வை தீட்சண்யமானது. நீதிவழிவிட்டுத் தவறியோரை அது விடாமல் துரத்தும். அவச் சொல் பேசுபவர்களை அவல வாழ்க்கைக்குள் தள்ளிவிடும்.
இத்தகையோர் விலகாத இருட்டுக்குள் கருகிப் புரள வேண்டியதுதான். நல்லவர்களுக்கு துன்பங்கள் தோல்வியல்ல‚ காலம் கலகத்தின் பின்னர் தெளிவைத் தந்துகொண்டுதானிருக்கின்றது.
வாழ்வியல் தரிசனம் 20/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago