Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 மார்ச் 19 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இல்லறத்தை ஏன் தர்மத்தினுள் உள்ளடக்கினார்கள் என்பதை அறியவேண்டும்.
உலகத்தில் தர்ம நெறியை நிலைநாட்ட, இல்லற தர்மம் இன்றியமையாதது. கணவன், மனைவி உத்தம நெறியுடன் வாழ்ந்து, நன்மக்கள் பேற்றினூடாக உலகத்துக்கு அவர்களை அர்ப்பணிக்க வேண்டும். அறப்பணிகளைச் செய்தும், தங்கள் வாரிசுகளூடாக, அவர்களையும் இப்புனித பணிகளை மேற்கொள்வதுமே இல்லற தர்மமாகும்.
தனது நலத்துடன், பிறர் நலன் பேணுதல், நெஞ்சுக்கு இனிமை தரும் நற்பழக்கமாகும். புத்திரபாக்கியம் இல்லாத கணவன், மனைவி தன்னலமே இல்லாது பிறருக்காகச் செய்யும் சேவைகள் மிகவும் புனிதமானதாகும்.
திருமணமாகாத பெரும் தலைவர்கள், தொண்டு உள்ளத்துடன் வாழும் பூமி இது. எனவே, தர்மத்தை இறைவழியில் சென்று காப்பது தனிமனிதனின் கடமையாகும். சேவை செய்வதற்காகவே குடும்பத்துக்குள் புகுந்திடாமல், முழு உலகையும் தங்கள் குடும்பமாகக் கருதிய ஞானிகளைக் கொண்ட பூமியில் வாழுகின்றோம். கரிசனையுடன் தர்மம் இயற்றுக.
வாழ்வியல் தரிசனம் 19/03/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
11 May 2025
11 May 2025