Princiya Dixci / 2016 ஜூலை 22 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாணப்பட வேண்டிய இடத்தில் இயல்பாகவே நாணம் ஏற்பட்டே தீரும். எந்தவித வெட்கமும் இன்றி தவறான காரியங்ளையும் அருவருப்பான செயல்களையும் செய்பவர்களை பிறர் வெறுத்தே தீருவர்.
மேலும் சில பேர்வழிகள் கூசாமல் தங்களின் செயல்களை நியாயப்படுத்தியும் பேசுவார்கள்.
வெட்கம் நாகரிகமான வாழ்க்கைக்கு முதன்மையான ஒன்றாகும். பொது இடங்களில் புகும்போது மற்றவர்கள் கிண்டல் செய்வது போல் இயங்கலாமா? அதே போல் தேவையின்றி வெட்கப்படுதல் கூடாது.
சற்றேனும் முகம் தெரியாதவர்களுடன் உரையாடும்போது பக்குவமாக இருக்கவேண்டும். இடத்திற்குத் தகுந்தாற்போல எங்கள் நடத்தையிலும் அவதானம் தேவையானதே. மேலும் பிறர் வெறுத்து, முகம் சுழிக்கப் பேசுவதும் வெட்கம் கெட்ட பழக்கம்தான்.
நாணம் பெண்களுக்கானது மட்டுமல்ல, ஆண்களுக்குமான பொதுவான பண்பு.
வாழ்வியல் தரிசனம் 22/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .