Princiya Dixci / 2016 ஜூன் 23 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எந்த வயதிலும் சந்தோஷமாக வாழலாம். இது, அவரவர் மனோநிலை, மனத்தின் பலத்தைப் பொறுத்த விடயம்.
இன்பமான பொழுதுகளிலும் சிலர் துன்பங்களைத் தேடுவதுண்டு. எதனையாவது இரைமீட்டி, அன்றை பொழுதை வீணே அழித்துவிடுவர்.
துன்பமான சம்பவங்கள், சில இயற்கையான நிகழ்வுகளே, இதனை யதார்த்தமாகப் புரிந்துகொள்ளும் பக்குவத்தினை, நாம் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களைச் சுவாரஸ்யமாக எடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் என்ன, யுகம் யுகமாகவா வாழப்போகிறோம்?
கடந்து போகும் வாழ்க்கையில் பயம், பீதி, கவலையுடன் கழித்தால், அப்போது சந்தோஷம் என்ற ஒன்றும் உள்ளது என்பதை எப்போது தான் அறியப் போகிறீர்கள்.
வாழ்ந்து பார்ப்பதில்தான், சந்தோஷங்களின் இருப்பிடங்களையும் கைப்பற்றிட முடியும்.
வாழ்வியல் தரிசனம் 23/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .