2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 24/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்காலத்தில் பல பிள்ளைகள், தங்கள் பெற்றோரை மதிக்காமல் உதாசீனம் செய்வதற்கும் காரணம் வேறுயாருமல்ல, அவர்களின் பெற்றோர்கள் தான்.

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் கூட இந்நிலையில் வளர்ந்து, தாய், தந்தை மீதான பற்று, பாசம் நலிவடைந்தே போகின்றது.

கணவன், மனைவியைத் தூற்றுவதும், மனைவி, கணவனைப் பரஸ்பரம், பிள்ளைகளின் முன்னே இவ்வண்ணம் நடந்தால், எங்கனம், அவர்களுக்கு இவர்கள் மீது மரியாதை சரியாகக் கிடைக்கப் போகிறது.

பிள்ளைகளுக்கான தேவைகளை சரியாக நிறைவேற்றுவதுடன், மிகவும் கண்ணியமான முறையில் பிள்ளைகளுடனும், தமக்கிடையேயும் பிணைப்பை மேம்படுத்தல் அவசியமானதாகும்.

பெற்றோர், பிள்ளைகளின் இதயங்களில் கீறல்களை உருவாக்குதல் ஆகாது.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .