2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 25/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 25 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்மைச் சூழ்ந்துள்ள காற்று எமது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. காற்று, விழிகளில் புலப்படாதது போலவே, தங்கள் மேலான பாசத்தைக்கூட தமக்கு வேண்டியவர்களுக்கே காட்டாமல் இருக்கின்றார்கள். இதனைப் பலரும் புரிந்துகொள்ளாமல் வேதனைப்படுகின்றார்கள். 

பாசத்தை மனதில் பூட்டிவைத்தல் சரியானதல்ல. இதனைப் பரஸ்பரம் மற்றவர்களுடன் பகிர்தலே சிறப்பு. 

தப்பான அபிப்பிராயங்கள் குடும்பங்களிடையேயும், நண்பர்கள் உறவினர்களிடையேயும் உருவாக மூல காரணம், பாசப்பகிர்வினை வெளிப்படுத்தாமையேதான் என்பதை உணர்க.

அன்புக்காக ஏங்குபவர்களிடம் அதனை வெளிப்படுத்தினால் என்ன வெட்கம்? அன்பு, பாசத்தின் முன் வீம்பும் வேகமும் வெட்கமும் தொலைந்தே போகும்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .