2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

வாழ்வியல் தரிசனம் 05/01/2016

Princiya Dixci   / 2016 ஜனவரி 05 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாத பேய், பிசாசுகளுக்கு அச்சப்படுபவர்கள், எம் கண்முன் நடமாடும் அசுரர்களைக் கண்டும் வாழா திருப்பது வெட்கப்படக் கூடியதே.

மேலும், இந்த நபர்களுடன் தோழமை கொள்ள விருப்பப்படும் பிரகிருதிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். தமது பாதுகாப்புக்காகப் பாவிகளுடன் உடன்படிக்கை செய்தல் அடம்பிடித்து பாவங்களைக் கட்டி அணைப்பது போலாகும்.

காணக்கூடாத நபர்களைக் கண்டு கொள்ளல் வேண்டாம். இந்தப் பெரிய உலகில் கெட்ட ஒரு சில நபர்களிடமா தோழமை கொள்வது?

ஓரிரு நல்லவர் சகவாசமே போதும் எம்மை வானிலும் உயர்த்தி வைத்திடுவர். தெரிந்து கொள்க.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X