2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 07/01/2016

Princiya Dixci   / 2016 ஜனவரி 07 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கத்திக் கத்திப் பேசியே சத்தியத்தைச் சேதம் செய்து, அசத்தியத்தை அரியாசனத்தில் ஏற்றிவிட அரசியல்வாதிகளில் பலர் முனைவதும், சில சமயம் அந்த முயற்சி கை கூடுவதும் சகஜமாகிவிட்டது. 

மொத்தத்தில் இன்னமும் மக்களின் ஐயம்தான் தெளிவு பெறவேயில்லை. நல்லதை உணரும் ஆளுமைத் திறனை மழுங்கடிக்கும் வித்தையை மக்களிடமே செலுத்தும் இவர்களை எப்போது உதயமாகும் இறைவா‚

ஆயினும் அனுபவங்களும், சதா எம்மைச் சுற்றி, சுற்றி வரும் ஒளிக்கீறல்களும் என்றோ ஒரு நாள் முழு ஒளி வெள்ளமாகி சத்தியத்தின் மேன்மையை உணர்த்தி நிற்கும்.

உண்மைகள் கூட கால அவகாசம் கோருகின்றன.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .