Princiya Dixci / 2016 ஜனவரி 11 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொடுக்கப்பட வேண்டியவர்களுக்கே கொடை அளிக்கப்படல் வேண்டும். பொருள் இருப்பவனுக்குக் கொடுப்பதில் ஏது அர்த்தம்? இன்று பெருமைக்காக விருந்துபசாரங்களைச் செல்வந்தர்கள், பணம் படைத்தவர்களுக்காகவே செய்து மகிழ்கின்றார்கள்.
இந்த வைபவங்களில் ஏழ்மை நிலையிலுள்ள உறவுக்காரர்களையும் அழைப்பதில்லை. நலிந்த மக்களுக்கு வலிந்து வழங்குவதே கொடையின் சிறப்பாகும்.
மேலும், ஈகை என்பது பொருள் வழங்குவது மட்டுமல்ல. கல்விச் செல்வத்தை எந்த எதிர்ப்புமின்றி தன்னார்வமற்ற முறையில் அனைவருக்கும் வழங்குவதும் ஈகைதான்‚
மனம், மொழி, வாக்கால், நல்லன செய்தலே மாபெரும் கொடை வழங்கலுமாகும்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .