Princiya Dixci / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவில் உள்ள அந்நாட்டின் வெள்ளைக்கார யுவதிக்கும் எமது நாட்டிலிருந்து சென்ற இளைஞனுக்கும் அண்மையில் திருமணம் கனடாவில் நடந்தேறியது.
திருமணத்தில் முன்னரே மணமகனின் பெற்றோர், தங்கள் தமிழ் கலாசாரத்தின் படியே திருமணம் நடைபெற வேண்டுமென்றும் அங்கு வருபவர்கள் எங்கள் நாட்டின் கலாசாரப்படியே உடைகள் அணிய வேண்டும் என்று மணமகள் வீட்டாருக்கு சொல்லியிருந்தார்கள்.
ஆனால் நடந்தது என்ன? திருமணத்தன்று எம்மவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கத்தேய பாணியில் உடை அணிந்து வந்தனர். ஆங்கிலேய பாணியில் கோட், சூட் வேறு அணிந்து வந்தனர்.
ஆனால், மணமகள் வீட்டார்கள் அனைவருமே தமிழ் மரபுப்படி உடை அணிந்திருந்தனர். பெண்கள் பட்டுச் சேலையுடன் ஆண்கள் எல்லோருமே பட்டுவேட்டி, சால்வையுடன் காணப்பட்டார்கள்.
தனக்கு இதைப் பார்த்ததுமே வெட்கம் வந்துவிட்டதாக, திருமணத்துக்குச் சென்று இக்காட்சியை கண்ட பெண்மணி கூறினர். இது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .