2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 07/03/2016

Princiya Dixci   / 2016 மார்ச் 07 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அந்தரங்கக் காதல் இன்பமளிக்கும். இதில், கவர்ச்சியும் துடிப்பும் கலந்தே சேர்ந்திருக்கும். 

ஆனால், இன்று காதலர்கள் பொது இடங்களில், வீதிகளில் எவ்வித லஜ்ஜையுமின்றி ஒருவரையொருவர் தழுவியபடி நடக்கிறார்கள்.

மேலும், பலபேர் பார்க்க, பேருந்துகளில் இவர்களின் செய்கைகளைப் பார்த்தால், மெய்யான காதலர்கள் போல் தெரிவதேயில்லை.

காதலின் தூய்மை பற்றித் தெரியாமல், கண்டபடி நடப்பது அதனைக் கொச்சைப் படுத்துவது போலாகும். 

காதலர் தனித்திருந்து இருப்பதே சுகானுபவமும் இருவர் உள்ளங்களிடையேயான பூரண சுதந்திரமுமாகும்.

களவாக ஒழித்திருந்து காதலிக்கும் உள்ளக் கிளர்ச்சிக்கும், வெட்கமேயறியாது பொது இடத்துக் காதலுக்கும் எத்தனை வேறுபாடு?

வாழ்க்கை, திரைப்படத்துக் காட்சிகளாக அமையக் கூடாது.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .