Princiya Dixci / 2016 மார்ச் 11 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்லாமே பொய், எதற்கும் ஆசைப்படக் கூடாது என்று பெரும் ஞானிகள்போல் பேசுபவர்களில் பலர், சொந்த வாழ்க்கையில், குறுக்குவழியில் பிறர் வெறுக்கும் வண்ணம் சொத்துக்களைக் குவிப்பார்கள்.
வெளிப்படையாகவே நேரிய வழியில் பொருளீட்டினால் எவ்விதமான தப்புக்களும் கிடையாது. அப்படியிருக்கப் பொய்யான வார்த்தைகளைச் சதா சொல்லும்போதே இத்தகையவர்கள் சுயரூபத்தை எவர்தான் அறியமாட்டார்கள்?
நேரிய வழியில் வாழ்பவர்கள் தங்களைப் பற்றி நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
நெஞ்சத்தில் நிறைவை ஒருவர் அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ மௌனமாக இருப்பதுவே நாகரிகமானதாகும்.
வார்த்தைகளைக் கோர்க்கும்போதே, நெஞ்சத்தின் சத்திய அதிர்வையும் நோக்க வேண்டும். இதனையுணர்ந்தால் பொய்புனைய சித்தம் இடம்கொடுக்குமா?
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .